518 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இந்திய அணி வெஸ்ட்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-10-2025
518 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இந்திய அணி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 518 ரன்களுக்கு டிக்ளேர் செய்துள்ளது.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 318 ரன்கள் எடுத்த நிலையில், இன்று 2வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 518 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 175 ரன்களும், கேப்டன் சுப்மன் கில் 129* ரன்களும், சாய் சுதர்ஷன் 87 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் வாரிகன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Update: 2025-10-11 08:27 GMT