விமான விபத்தில் யாரும் உயிர்பிழைத்திருக்க... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-06-2025

விமான விபத்தில் யாரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை.. காவல்துறை உயர் அதிகாரி தகவல்

அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு 242 பேருடன் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம் டேக்ஆப் ஆன சில நிமிடங்களில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விமானத்தில் பயணித்த யாரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என அகமதாபாத் போலீஸ் கமிஷனர் ஜி.எஸ்.மாலிக் கூறியிருக்கிறார்.

‘விபத்தில் யாரும் உயிர் பிழைத்ததாகத் தெரியவில்லை’ என ஏ.எஃப்.பி.  செய்தியை மேற்கோள் காட்டி அவர் கூறியிருக்கிறார். சில அலுவலகங்கள் இருந்த குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்ததால் உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளன என்று அவர் கூறியிருக்கிறார்.

Update: 2025-06-12 12:28 GMT

Linked news