விமான விபத்து: மீட்பு பணியில் 130 ராணுவ வீரர்கள் ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-06-2025

விமான விபத்து: மீட்பு பணியில் 130 ராணுவ வீரர்கள்

இந்திய ராணுவம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:-

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு உதவுவதற்காக சுமார் 130 வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவ குழுக்கள் பணியில் ஈடுபட்டுள்ளன. குப்பைகளை அகற்றுவதற்காக ஜேசிபி-களுடன் கூடிய பொறியியல் குழுக்கள், மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களைக் கொண்ட மருத்துவக் குழுக்கள், விரைவு நடவடிக்கை குழுக்கள், தீயை அணைக்கும் கருவிகள் மற்றும் தண்ணீர் டேங்கர்களுடன் கூடிய தீயணைப்பு உபகரணங்கள் மற்றும் கள மேலாண்மைக்கான பணியாளர்கள் ஆகியோர் இந்த குழுக்களில் இடம்பெற்றுள்ளனர். ராணுவ மருத்துவமனையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-06-12 12:38 GMT

Linked news