‘இதுதான் எங்கள் உலகம்’- ‘மாஸ்க்’ படத்தின் 2வது... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-11-2025
‘இதுதான் எங்கள் உலகம்’- ‘மாஸ்க்’ படத்தின் 2வது பாடல் வெளியீடு
அறிமுக இயக்குனர் விக்ரனன் அசோக் இயக்கும் ‘மாஸ்க்’ படத்தில் கவின் நடித்துள்ளார். இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகையான ருஹானி ஷர்மா கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும், சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 21ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ‘மாஸ்க்’ படத்தின் 2வது பாடல் வெளியாகி உள்ளது. ‘இதுதான் எங்கள் உலகம்’ எனத்துவங்கும் இப்பாடலை ஆண்ட்ரியா , அனந்து, ஸ்மித் ஆஷர், அருள்பரன் வாஹீசன் ஆகியோர் பாடியுள்ளனர்
Update: 2025-11-12 14:17 GMT