கடலூரில் சாலையோரம் லாரியை நிறுத்தி... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 13-04-2025
கடலூரில் சாலையோரம் லாரியை நிறுத்தி ஓய்வெடுத்த டிரைவரை தாக்கி பணம் பறிப்பு
திண்டிவனத்தில் இருந்து குறிஞ்சிப்பாடிக்கு ஜல்லி ஏற்றிக்கொண்டு லாரியை, தம்பிப்பேட்டையில் சாலையோரம் லாரி டிரைவர் நிறுத்தியுள்ளார்.அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் லாரியின் கண்ணாடியை உடைத்தும், டிரைவரை தாக்கியும் மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், டிரைவரின் செல்போன் மற்றும் ரூ.25,000 பணத்தை பறித்து சென்றனர். இந்த சம்பவம் லாரி டிரைவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2ம் தேதி லாரி ஓட்டுநர்களை தாக்கி பணம் பறித்த சம்பவத்தில், மொட்டை விஜய் என்பவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.தற்போது மீண்டும் லாரி டிரைவரை தாக்கி பணம் பறிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Update: 2025-04-13 03:41 GMT