காங்கோவில் பல ஆண்டுகளாக அரசுக்கும், ருவாண்டா... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 13-04-2025
காங்கோவில் பல ஆண்டுகளாக அரசுக்கும், ருவாண்டா நாட்டின் ஆதரவு பெற்ற எம்.23 என்ற கிளர்ச்சியாளர் அமைப்புக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இதனால், 70 லட்சம் பேர் தங்களை பாதுகாத்து கொள்ள புலம்பெயர்ந்து சென்றனர்.
இந்நிலையில், சமீபத்தில், கிழக்கு காங்கோவின் கோம பகுதிக்கு கிளர்ச்சியாளர்கள் முன்னேறினர். அதற்கு முன் கடந்த பிப்ரவரியில் புகாவு நகரையும் கைப்பற்றி இருந்தனர். கடந்த வெள்ளி மற்றும் சனி ஆகிய நாட்களில் மீண்டும் மோதல் வெடித்தது. இதில், அந்த பகுதியின் மிக பெரிய நகரான கோம பகுதியில் நடந்த மோதலில், 52 பேர் வரை கொல்லப்பட்டனர்.
கைஷீரோ மருத்துவமனையின் உள்ளே சென்றும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் பலியானார். இதனை காங்கோவின் உள்துறை அமைச்சகம், உறுதி செய்து உள்ளது.
Update: 2025-04-13 12:19 GMT