கரூர் கூட்ட நெரிசல்: சிபிஐ விசாரிக்க சுப்ரீம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-10-2025

கரூர் கூட்ட நெரிசல்: சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2025-10-13 05:52 GMT

Linked news