இஸ்ரேல் சென்றார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்இஸ்ரேல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-10-2025

இஸ்ரேல் சென்றார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்

இஸ்ரேல் - ஹமாஸ் போருக்குப்பின் காசாவில் அமைதியை கொண்டுவருவது தொடர்பாக காசா அமைதி ஆலோசனை கூட்டம் எகிப்தில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டம் எகிப்து அதிபர் எல் சிசி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்குமுன் ஹமாஸ் ஆயுதக்குழுவால் விடுதலை செய்யப்படும் இஸ்ரேலிய பணய கைதிகளை டொனால்டு டிரம்ப் சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இன்று இஸ்ரேல் சென்றுள்ளார். இஸ்ரேலின் பென் குரின் விமான நிலையத்திற்கு வந்த டொனால்டு டிரம்ப்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் சென்று வரவேற்றார்.

Update: 2025-10-13 07:29 GMT

Linked news