ரிசர்வ் வங்கியின் புதிய காசோலை உடனடி தீர்வு முறை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-10-2025

ரிசர்வ் வங்கியின் புதிய காசோலை உடனடி தீர்வு முறை தலைவலியாக மாறியுள்ளது - செல்வப்பெருந்தகை

இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய புதிய காசோலை உடனடி தீர்வு முறை, வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் தலைவலியாக மாறியுள்ளது. காசோலைகள் ஒரே நாளில் தீர்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், தொழில்நுட்ப குறைபாடுகள், தரமற்ற ஸ்கேன் மற்றும் புதிய முறைக்குப் பயிற்சி பெறாத ஊழியர்கள் காரணமாக, பல காசோலைகள் நான்கு நாட்களுக்கும் மேலாகத் தாமதமாகின்றன.

எனவே ரிசர்வ் வங்கி மற்றும் சம்பந்தப்பட்ட வங்கிகள் அனைத்து காசோலைகளையும் நேரத்துக்கு தீர்வு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

Update: 2025-10-13 10:33 GMT

Linked news