கார் வெடிப்பு எதிரொலி; ரெயில், விமான பயணிகளுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-11-2025

கார் வெடிப்பு எதிரொலி; ரெயில், விமான பயணிகளுக்கு டெல்லி காவல் இணை ஆணையாளர் அறிவுறுத்தல்

 டெல்லி போலீசின் காவல் இணை ஆணையாளர் மிலிந்த் தும்பிரே கூறும்போது, டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. இதனையொட்டி, ரெயில் நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு அனைத்து பயணிகளும் முன்கூட்டியே வரவும்.

ரெயில் நிலையங்களில் இருந்து ரெயில் புறப்படுவதற்கு குறைந்தது ஒரு மணிநேரத்திற்கு முன்பு வரவும். மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து ரெயில் புறப்படுவதற்கு குறைந்தது 20 நிமிடங்களுக்கு முன்பு வரவும். சர்வதேச விமானங்கள் புறப்படுவதற்கு குறைந்தது 3 மணிநேரத்திற்கு முன்பாக பயணிகள் வரவும்.

பாதுகாப்பு சோதனைகளை எளிமையாக மேற்கொள்வது உறுதி செய்யப்படவும், கடைசி நேர அசவுகரியம் ஏற்படாமல் தவிர்க்கவும் மற்றும் சரியான நேரத்தில் பயணம் செய்வதற்கும் ஏதுவாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

Update: 2025-11-13 13:27 GMT

Linked news