ராணுவ கர்னல் சோபியா குரேஷியின் மதத்தை வைத்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...14-05-2025
ராணுவ கர்னல் சோபியா குரேஷியின் மதத்தை வைத்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறிய மத்திய பிரதேச மந்திரி விஜய் ஷா மன்னிப்பு கேட்டுள்ளார். நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களை, அவர்களின் சகோதரியை வைத்து பிரதமர் மோடி ஒழித்துவிட்டதாக மந்திரி விஜய் ஷா கூறியிருந்தார். கர்னல் சோபியா இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் என்பதால், அவரை பயங்கரவாதிகளின் சகோதரி என சித்தரிக்கும் வகையில் மந்திரி பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் மன்னிப்பு கேட்டுள்ளார்.
Update: 2025-05-14 03:40 GMT