தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...14-05-2025
தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம், அரசுக்கு வழங்குவதற்காக நிறைவேற்றப்பட்ட சட்டங்களை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
அந்த மனுவில், பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணாக சட்ட பிரிவுகள் உள்ளன என்றும், இதனை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இதுபற்றி மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்து உள்ளது. தொடர்ந்து, வழக்கின் விசாரணை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
Update: 2025-05-14 11:48 GMT