காசா முனையில் இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் முக்கிய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-12-2025
காசா முனையில் இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் முக்கிய தளபதி பலி
காசா முனையில் இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. காசா சிட்டியில் சென்ற காரை குறிவைத்து டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் முக்கிய தளபதி ரயிட் சயத் கொல்லப்பட்டார். மேலும், ஹமாஸ் ஆயுதக்குழுவை சேர்ந்த மேலும் 4 பேர் உயிரிழந்தனர். கொல்லப்பட்ட ஹமாஸ் தளபதி ரயிட் சயத் 2023 அக்டோபர் 7ம் தேதி நடந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
Update: 2025-12-14 04:59 GMT