விடுபட்டவர்கள் கோரிக்கை வைத்தால் அவர்களுக்கும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-12-2025
விடுபட்டவர்கள் கோரிக்கை வைத்தால் அவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தருமபுரியில் நடந்த திருமண நிகழ்வில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடுதான் நம்பர் 1 மாநிலமாக உருவாகி இருக்கிறது. இது நாங்கள் வெளியிட்ட அறிக்கை அல்ல. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை. எத்தனையோ சோதனைகளை தாண்டி சாதனை படைத்திருக்கிறோம்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஏற்கனவே 1 கோடியே 13 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு கொண்டிருந்தது. தற்போது மேலும் 17 லட்சம் சகோதரிகளுக்கு அதாவது 1 கோடியே 30 லட்சம் பேருக்கு வழங்கக்கூடிய நிலையை உருவாக்கி இருக்கிறோம். சில சகோதரிகள் விடுபட்டிருந்தால்... கோரிக்கை வைத்தால் அவர்களுக்கும் நிச்சயம் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.
7-வது முறையாக திராவிட மாடல் ஆட்சி உருவாகி இருக்கிறது என்ற பெருமை நமக்கு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.