உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-02-2025
உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக இன்று முதல் 3 நாட்களுக்கு (15, 16 மற்றும் 17 ஆகிய நாட்கள்) புதுடெல்லியில் இருந்து பிரயாக்ராஜ் வழியாக வாரணாசிக்கு வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
இதன்படி, காலை 5.30 மணிக்கு புதுடெல்லியில் இருந்து புறப்படும் ரெயில் பிரயாக்ராஜ் நகருக்கு நண்பகல் 12 மணியளவில் வந்து சேரும். இதன்பின்னர், வாரணாசிக்கு பிற்பகல் 2.20 மணிக்கு வந்து சேரும் என வடக்கு ரெயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது.
இதன்பின்னர், வாரணாசியில் இருந்து பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படும் ரெயில் பிரயாக்ராஜ் நகருக்கு மாலை 5.20 மணிக்கு வந்தடையும். பின்னர் புதுடெல்லிக்கு இரவு 11.50 மணியளவில் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வார இறுதியில் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்பதற்காக, இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.