இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-02-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
நான்தான் இந்த நாட்டுக்கு பாதுகாப்பு - சீமான் பேட்டி
கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், என் சொந்த நாட்டில் எனக்கு பாதுகாப்பு தேவையில்லை, நான்தான் இந்த நாட்டிற்கு பாதுகாப்பு. வாக்குகளை விற்கும் சந்தையாக தேர்தலை மாற்றிவிட்டனர். ஆதாயம் இருக்குமானால் எல்லோரும் பிராகாரன் படத்தை பயன்படுத்துங்கள். மயிலாடுதுறை இரட்டைக்கொலைக்கு முன்விரோதமே காரணம் என போலீசார் கூறுவது வேதனையளிக்கிறது’ என்றார்.
தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து உள்ளார். மத்திய அரசின் நிதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால், திட்டங்கள் மக்களை சென்றடைவதிலும் தாமதம் ஏற்படுகிறது என அவர் கூறியுள்ளார்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவின் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், செங்கோட்டையனின் கோரிக்கையை ஏற்று தேங்காய் விவசாயிகளுக்கு விரைவாக பணப்பட்டுவாடா செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் உறுதியளித்து உள்ளார்.