டெல்லியில் பள்ளிகளில் மாணவ மாணவிகளிடம், கூடுதல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 15-04-2025

டெல்லியில் பள்ளிகளில் மாணவ மாணவிகளிடம், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதனை செலுத்த தவறும் மாணவர்களை பள்ளியை விட்டு வெளியே அனுப்பும் சம்பவங்களும் நடந்துள்ளன.

இதனால், பெற்றோர் அந்த பள்ளிகளுக்கு வெளியே, தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், டெல்லியில் கட்டண உயர்வு விவகாரத்தில் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா, புகார்கள் பெறப்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என தெரிவித்து உள்ளார்.

Update: 2025-04-15 11:31 GMT

Linked news