மெக்சிகோவின் ஜாலிஸ்கோவில் உள்ள ஒரு அழகு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...15-05-2025

மெக்சிகோவின் ஜாலிஸ்கோவில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் 23 வயதான வலேரியா மார்க்வெஸ் டிக்டாக்கில் லைவ் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத நபர் அவரை பலமுறை சுட்டார். இதில் படுகாயமடைந்த வலேரியா சரிந்து விழுந்து உயிரிழந்தார். பின்னர் பெண் ஒருவர் அந்த லைவை கட் செய்தார். அப்போது அந்த பெண்ணின் முகம் வீடியோவில் பதிவானது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2025-05-15 04:09 GMT

Linked news