புதுக்கோட்டை, வடகாடு திருவிழா விவகாரத்தில் கலவரம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...15-05-2025
புதுக்கோட்டை, வடகாடு திருவிழா விவகாரத்தில் கலவரம் நடந்த சம்பவ பகுதியை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்ய சென்னை ஐகோர்ட்டின் மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்து உள்ளது. அவர் நேரில் சென்று ஆய்வு நடத்தாதது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கலெக்டர் ஆய்வு செய்யவில்லை என்றால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
கடந்த 4 முதல் 7ம் தேதி வரையிலான நாட்களில் கோவில் பிரச்சினை நடந்த இடத்தின் சி.சி.டி.வி. காட்சிகளை தாக்கல் செய்யவும் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
Update: 2025-05-15 12:59 GMT