இங்கிலாந்து போர் விமானம் திருவனந்தபுரத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-06-2025
இங்கிலாந்து போர் விமானம் திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கம்: காரணம் என்ன..?
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில், இங்கிலாந்து நாட்டின் F35 போர் விமானம் அவசரமாக தரையிறங்கியது.
எரிபொருள் அவசரநிலையைக் காரணம் காட்டி, அந்த விமானம் உடனடியாக தரையிறங்க அனுமதி கோரிய நிலையில் விமான நிலைய அதிகாரிகள் அதற்கு அனுமதி அளித்தனர்.
இந்நிலையில் அந்த விமானத்திற்கு எரிபொருள் வழங்குவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-06-15 07:26 GMT