இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-06-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வருகிற 18-ந் தேதி வரை அங்கு மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பத்தனம் திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு 17-ந் தேதி சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக கேரள கடற்கரையில் மணிக்கு 40 முதல் 60 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், 18-ந் தேதி வரை மீனவர்கள் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை
- 3 நாள் அரசுமுறை பயணமாக துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் புதுச்சேரி வருகை
- துணை குடியரசு தலைவர் நிகழ்ச்சிகளுக்காக புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை
- போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க ஏற்பாடு
மதுரை முருக பக்தர்கள மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் முழு உத்தரவு நகல் வெளியானது.
மதுரை பாண்டி கோயில் அருகே அம்மா திடலில் இந்து முன்னணி நடத்தவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 52 நிபந்தனைகளுடன் அனுமதி.
மத அமைப்புகளை அரசியலுக்கு பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்
முருக பக்தர்கள் மாநாட்டில் மத நல்லிணக்கம் காப்பாற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்
ஒலிபெருக்கி பயன்பாட்டை அரசு தெரிவிக்கும் அளவிற்குள் இருக்குமாறு மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் -நீதிபதி
காதல் விவகாரத்தில் இளைஞரைக் கடத்திய வழக்கில் தலைமறைவாக உள்ள புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி முன் ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை ஏற்று இன்று மாலை 5.30 மணியளவில் விசாரணை நடைபெற உள்ளது.
கோடை விடுமுறை முடிந்த பிறகும் திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் கூட்டம் குறையாமல் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த மாதம் 15-ந் தேதி முதல் நேற்று வரை பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் அதிகபட்சமாக 92 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். வெள்ளிக்கிழமை தோறும் ஏழுமலையானுக்கு அபிஷேக சேவை நடைபெறுவது வழக்கம்.
அபிஷேக சேவை காரணமாக 3 மணி நேரத்திற்கு மேல் தரிசனம் நிறுத்தப்படுகிறது. வெள்ளிக்கிழமைகளில் 60 முதல் 65 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்து வந்தனர். ஆனால் தற்போது கூடுதலாக 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய தேவஸ்தான அதிகாரிகள் ஊழியர்களுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- கொடைக்கானல்: குணா குகைக்கு சுற்றுலா வந்த கர்நாடகாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளிடம் இருந்து 500 ரூபாய் நோட்டுக் கட்டை கொத்தாக பிடுங்கிச் சென்ற குரங்கு.
- ரூபாய் நோட்டுகளை ஒவ்வொன்றாக குரங்கு வீசியதால், மீண்டும் பணம் கிடைத்துள்ளது. குரங்கின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சுற்றுலா பயணிகள் வேதனை.
- ”வனத்தில் மேச்சலுக்கு தடை விதிப்பதை எதிர்த்து, ஜூலை 10ம் தேதி ஆடு, மாடுகளின் மாநாடு நடத்தப்போகிறேன்.
- அதில், தீர்வு கிடைக்கவில்லை என்றால் 3,000 ஆடு, மாடுகளை திரட்டிக்கொண்டு நானே மேய்க்கச் செல்வேன்.”
- தூத்துக்குடியில் பனைமரம் ஏறும் போராட்டத்தில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு
நீலகிரி மாவட்டத்தில் இன்று அதி கனமழைக்கான ’ரெட் அலர்ட்’
நீலகிரி மாவட்டத்தில் இன்று அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் (ஜூன் 17ம் தேதி) நீலகிரி, கோவைக்கு மட்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.