2026ல் பாமக கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமைய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-06-2025

2026ல் பாமக கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

திருவள்ளூரில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடக்கும் பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பொருளாளர் திலகபாமா, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து அறிவுசார் நகரம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இதனையடுத்து நிகழ்வில் உரையாற்றிய அன்புமணி ராமதாஸ், “பாமகவால் தான் தமிழ்நாட்டில் நல்லாட்சி கொடுக்க முடியும். 2026ல் பாமக கூட்டணி ஆட்சி அமையும் கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். 2026ல் பாமக கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும். அதற்காக தொண்டர்கள் பாடுபட வேண்டும்.

என் மீது கோபம் இருந்தால் அய்யா ராமதாஸ் என்னை மன்னிக்க வேண்டும். 100 வருடம் மகிழ்ச்சியோடு ராமதாஸ் வாழ வேண்டும். தந்தையிடம் மன்னிப்பு கேட்பது ஒன்றும் பெரிதல்ல” என்று அவர் கூறினார். 

Update: 2025-06-15 07:48 GMT

Linked news