கோடை விடுமுறை முடிந்தும் திருப்பதியில் குறையாத பக்தர்கள் கூட்டம்
கோடை விடுமுறை முடிந்த பிறகும் திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் கூட்டம் குறையாமல் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த மாதம் 15-ந் தேதி முதல் நேற்று வரை பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் அதிகபட்சமாக 92 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். வெள்ளிக்கிழமை தோறும் ஏழுமலையானுக்கு அபிஷேக சேவை நடைபெறுவது வழக்கம்.
அபிஷேக சேவை காரணமாக 3 மணி நேரத்திற்கு மேல் தரிசனம் நிறுத்தப்படுகிறது. வெள்ளிக்கிழமைகளில் 60 முதல் 65 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்து வந்தனர். ஆனால் தற்போது கூடுதலாக 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய தேவஸ்தான அதிகாரிகள் ஊழியர்களுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Update: 2025-06-15 10:49 GMT