கேரளாவில் கனமழை தீவிரம்;மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வருகிற 18-ந் தேதி வரை அங்கு மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பத்தனம் திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு 17-ந் தேதி சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக கேரள கடற்கரையில் மணிக்கு 40 முதல் 60 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், 18-ந் தேதி வரை மீனவர்கள் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Update: 2025-06-15 14:01 GMT