பீகார் சட்டசபை தேர்தலில் தோற்ற போதும்... பா.ஜ.க.,... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-11-2025
பீகார் சட்டசபை தேர்தலில் தோற்ற போதும்... பா.ஜ.க., ஜே.டி.யூ.வை பின்னுக்கு தள்ளி தேஜஸ்வி யாதவ் சாதனை
பீகார் சட்டசபை தேர்தலில் பெருவாரியான இடங்களை கைப்பற்றி தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ.) ஆட்சியை மீண்டும் தக்க வைத்து கொண்டது. இந்த தேர்தலில், தேஜஸ்வி யாதவ் தோற்ற போதும், அவருடைய கட்சி சாதனை ஒன்றை செய்துள்ளது. அது அதிக வாக்கு சதவீதம் ஆகும்.
பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யூ.) ஆகிய கட்சிகளை இந்த விசயத்தில் பின்னுக்கு தள்ளி ராஷ்டீரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.) அதிக வாக்கு சதவீதம் (23 சதவீதம்) கொண்டுள்ளது. இது பா.ஜ.க. (20.08) பெற்ற வாக்கு சதவீதத்தினை விட 2.92 சதவீதம் மற்றும் முதல்-மந்திரி நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை விட 3.75 சதவீதம் அதிகம் ஆகும்.
Update: 2025-11-15 12:29 GMT