யுனிசெப் தூதரான நடிகை கீர்த்தி சுரேஷ்ரஜினிமுருகன்,... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-11-2025
யுனிசெப் தூதரான நடிகை கீர்த்தி சுரேஷ்
ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், மாமன்னன், சைரன் போன்ற படங்களில் நடித்து உள்ளார். தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் வெளியான ரகு தாத்தா படத்தில் இவரது காதாபாத்திரம் மிகுந்த வரவேற்பை பெற்றது. நடிகை சாவித்ரி வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான நடிகையர் திலகம் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது கிடைத்தது. இவர் பாலிவுட்டில் வருண் தவானுடன் இணைந்து 'பேபி ஜான்' என்ற படத்தில் நடித்திருந்தார். இவர் நடித்த ‘ரிவால்வர் ரீட்டா’ படம் வரும் 28ம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும், விஜய் தேவரகொண்டாவுடன் ‘தோட்டம்’, மிஷ்கினுடன் ஒரு படம் என நடித்து வருகிறார்.
Update: 2025-11-15 13:50 GMT