விஜய் பிரசார இடத்துக்கு ரூ.50 ஆயிரம் வாடகை:... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 15-12-2025
விஜய் பிரசார இடத்துக்கு ரூ.50 ஆயிரம் வாடகை: அறநிலையத் துறை அதிரடி
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 31 ஏக்கர் நிலத்தில் வரும் 18-ந்தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில், கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று பேச இருக்கிறார்.
த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் செய்ய வைப்புத் தொகையாக ரூ.50 ஆயிரம் மற்றும் பிரசாரம் செய்ய அனுமதி கட்டணமாக ரூ.50 ஆயிரம் என ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டது. இந்தக் கட்டணத்தை செலுத்தியுள்ளனர். மேலும், கூட்டம் முடிந்ததும் கோவில் இடத்தை சுத்தம் செய்து தருவதாகவும் தவெகவினர் கூறியுள்ளனர்.
Update: 2025-12-15 05:49 GMT