உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் நடந்த 3-வது காசி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-02-2025
உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் நடந்த 3-வது காசி தமிழ் சங்கமம் தொடக்க விழாவில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேசும்போது, தென்காசியில், சிவகாசியில் என்று தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடர்பு இருந்திருக்கிறது. உலகில் பிரதமர் மோடி எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் திருக்குறளை பெருமைப்படுத்தி வருகிறார்.
பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் உலகெங்கும் திருவள்ளுவருக்கு கலாசார மையங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி 3-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கலாசார மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என்று பேசியுள்ளார்.
Update: 2025-02-16 03:48 GMT