இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-02-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-02-16 09:18 IST


Live Updates
2025-02-16 13:24 GMT

2026 தேர்தலில் அதிமுக தலைமையில் வலிமையான வெற்றிக்கூட்டணி அமையும். தமிழகத்தில் இரு மொழிக்கொள்கைதான் அமலில் இருக்கும். அதில் எந்த மாற்றமும் கிடையாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

2025-02-16 13:07 GMT

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் பலி

மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

2025-02-16 09:21 GMT

இந்தி திணிப்பு எந்த வடிவில் வந்தாலும் அதிமுக கடுமையாக எதிர்க்கும்; முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்


2025-02-16 08:27 GMT

மும்மொழி கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழ்நாட்டுக்கு நிதி வழங்க மத்திய அரசு மறுப்பதெல்லாம், சரியல்ல என கூறியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாட்டில் இருந்து வரியை மட்டும் ஏன் பெறுகிறீர்கள்? என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

2025-02-16 08:00 GMT

அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு 119 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட நிலையில், அவர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டனர் என மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

2025-02-16 07:50 GMT

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

2025-02-16 06:44 GMT

சென்னை துறைமுகம் வழியாக, ரூ.2 கோடி மதிப்புள்ள பச்சை பட்டாணி முறைகேடாக இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மோசடி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. டெக்ஸ்டைல் பொருட்கள் இறக்குமதி செய்வதிலும் அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. சுங்கத்துறை அதிகாரிகளுடன், இறக்குமதியாளர்கள் இணைந்து மோசடிகளை அரங்கேற்றியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

2025-02-16 06:03 GMT

சிவகங்கை மாவட்டம் ஒக்கூரில், பாம்பு கடித்து உயிருக்கு போராடிய 4 வயது சிறுமியை அரசு மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். அந்த சிறுமி, பூரண குணமடைந்த நிலையில், மருத்துவர்கள் முன்னிலையில் சிறுமியின் குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

Tags:    

மேலும் செய்திகள்