நெல்லை மற்றும் தென்காசி இடையே பயணிக்கும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 16-04-2025
நெல்லை மற்றும் தென்காசி இடையே பயணிக்கும் பயணிகளுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது. இனி அவர்கள் தங்கள் பேருந்து டிக்கெட்டுகளை டிஜிட்டல் முறையில், அதாவது கூகிள் பே (GPay) மற்றும் போன் பே (PhonePe) போன்ற செயலிகள் மூலமாகவோ அல்லது டெபிட் கார்டுகளை ஸ்வைப் செய்தோ அல்லது கியூ.ஆர். கோடுகளை ஸ்கேன் செய்தோ பெற்றுக்கொள்ளலாம். இந்த புதிய வசதி பயணிகளுக்கு பணமில்லா பரிவர்த்தனையை எளிதாக்குகிறது.
Update: 2025-04-16 03:36 GMT