முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 16-04-2025

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், ராஜேந்திர பாலாஜி மீது இரு வேறு வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி வழங்கிய நிலையில் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Update: 2025-04-16 09:17 GMT

Linked news