சீமான் மீது 100 வழக்குகளாவது தொடர்ந்திருக்க... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 16-04-2025
சீமான் மீது 100 வழக்குகளாவது தொடர்ந்திருக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு
சீமான் பேச்சுக்களுக்கு வழக்கு தொடர்வதாக இருந்தால், குறைந்தபட்சம் 100 வழக்குகளாவது தொடர்ந்திருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
நீதித்துறை அவமதிக்கும் வகையிலும், நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்து ஆபாசமாகப் பேசியதற்காக சீமான் மீது தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி இந்த காட்டமான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
மேலும் சீமான் பேசிய வீடியோ ஆதாரங்களை பார்த்து விட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
Update: 2025-04-16 10:20 GMT