வக்பு திருத்த சட்டம்: இடைக்கால உத்தரவுகளை... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 16-04-2025
வக்பு திருத்த சட்டம்: இடைக்கால உத்தரவுகளை நிறுத்திவைத்தது சுப்ரீம்கோர்ட்டு
வக்பு திருத்த சட்ட வழக்கில் இடைக்கால உத்தரவுகள் அனைத்தும் நாளை (17.04.2025) வரை நிறுத்திவைப்பதாக சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது.
நாளை மதியம் 2 மணி அளவில் விசாரணை நடைபெறும் என்றும், பின்னர் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என சுப்ரீம்கோர்ட்டு தலைமை அமர்வு தெரிவித்துள்ளது.
மேலும் வக்பு வாரியத்தில் 2 ஓய்வுபெற்ற நீதிபதிகள் தவிர மற்ற உறுப்பினர்கள் இஸ்லாமியர்களாக இருக்க வேண்டும் என்றும், வக்பு சொத்துகளை மாவட்ட கலெக்டர் வகைப்படுத்தலாம் ஆனால் நடவடிக்கை எடுக்க கூடாது என்றும் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.
Update: 2025-04-16 11:18 GMT