ஜெகன் மூர்த்தி ஆஜராக உத்தரவு 17 வயது சிறுவன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-06-2025

ஜெகன் மூர்த்தி ஆஜராக உத்தரவு

17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் போலீசாரால் தேடப்படும் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி, பிற்பகல் 2.30 மணிக்கு ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவர் முன் ஜாமின் கோரி நேற்று மனுத்தாக்கல் செய்திருந்தார்.

கடத்தலுக்கு உதவியதாக கூறப்படும் ஏடிஜிபி ஜெயராமனும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. ஆஜராகவில்லை என்றால் கைது செய்து ஆஜர்படுத்தவும் காவல்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு பிறபித்துள்ளது. ஆள் கடத்தலுக்கு ஜெயராமனின் அரசு வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.

Update: 2025-06-16 06:52 GMT

Linked news