இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-06-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-06-16 09:44 IST


Live Updates
2025-06-16 13:50 GMT
  • விஜய் ரூபானி உடலுக்கு அமித்ஷா அஞ்சலி
  • ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உடலுக்கு அமித்ஷா அஞ்சலி
  • குஜராத் ராஜ்கோட்டில் நடைபெற்ற இறுதி சடங்குகளில் அமித்ஷா, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் பங்கேற்பு
2025-06-16 12:37 GMT
  • பல சோதனைகள் முழுமையாக்கப்பட்டும் இந்த விபத்து நடந்ததுள்ளது'' - டாடா நிறுவன தலைவர் சந்திரசேகரன்
  • விசாரணைக்குப் பிறகு விபத்து ஏன் நடந்தது என்பதை கண்டுபிடிப்போம்'' - டாடா நிறுவன தலைவர் சந்திரசேகரன்
  • நான் என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் இழந்த உயிர்கள் மீண்டும் வரப்போவதில்லை'' - டாடா நிறுவன தலைவர் சந்திரசேகரன்
  • பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் உதவ நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்''
  • இறந்த அனைவரையும் நம் குடும்பமாக என்றென்றும் கருதுவோம்''- டாடா நிறுவன தலைவர் சந்திரசேகரன்
2025-06-16 12:35 GMT
  • எல்சா கப்பல் விபத்து - ரூ.5.97 கோடி டெபாசிட்
  • கேரள மாநிலம் கொச்சி துறைமுகம் அருகே விபத்தில் சிக்கிய எல்சா 3 என்ற லைபீரியா சரக்கு கப்பல்
  • கொச்சி, கொல்லம், ஆலப்புழாவில் கரை ஒதுங்கிய கப்பலின் கண்டெய்னர்கள்
  • கண்டெய்னர்கள் கடலில் மூழ்கியதால் ரூ.6 கோடி இழப்பு - முந்திரி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு
  • எல்சா கப்பல் நிறுவனம் நீதிமன்றத்தின் உத்தரவின்படி ரூ.5.97 கோடியை டெபாசிட் செய்துள்ளதாக தெரிவிப்பு
2025-06-16 12:34 GMT
  • சிறுவன் கடத்தல் வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவின் படி ஏடிஜிபி ஜெயராம் உடனடியாக கைது
  • செய்யப்பட்டுள்ளார். கடத்தலுக்கு அரசு வாகனத்தை ஜெயராம் பயன்படுத்தியதாகவும் கடத்தப்பட்ட சிறுவன் ஏடிஜிபி அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் காவல்துறை குற்றம் சாட்டியிருந்தது.
2025-06-16 10:45 GMT
  • ஜெகன்மூர்த்திக்கு இந்த கடத்தலில் தொடர்பு உள்ளது. இதுசம்பந்தமாக வழக்கறிஞர் சரத் குமார், முன்னாள் காவல் அதிகாரி மகேஸ்வரி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்"- நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் வாதம்
  • "எதுக்காக சட்டமன்றத்துக்கு அனுப்பினார்கள் என்பதை தாண்டி கட்டப்பஞ்சாயத்து செய்யலாமா" - ஜெகன்மூர்த்தியிடம் நீதிபதி கேள்வி
2025-06-16 10:38 GMT

ஆள் கடத்தல் வழக்கு: சென்னை உயர் நீதிமன்றத்தில் பூவை ஜெகன்மூர்த்தி ஆஜராகியுள்ளார்.

2025-06-16 10:03 GMT

நாடாளுமன்ற தொகுதிகள் குறைக்கப்படக்கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு; தமிழ்நாட்டுக்கு கிட்டதட்ட 60-70 எம்.பி சீட்டுகள் வர வேண்டும். 2026-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்து அமல்படுத்த வேண்டிய சூழல் மத்திய அரசுக்கு கிடையாது: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

2025-06-16 08:25 GMT

பிக்கப் வாகனத்தின் மீது விழுந்த ராட்சத மரம்

குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்துவரும் காற்றுடன் கூடிய கனமழையால் மஞ்சூர் சாலையில், ராட்சத மரம் ஒன்று பிக்கப் வாகனத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளார். மரத்தை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்