சிங்கப்பூர் அதிபர் ஒடிசா வருகை சிங்கப்பூர் அதிபர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-01-2025

சிங்கப்பூர் அதிபர் ஒடிசா வருகை

சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் இரண்டு நாள் பயணமாக இந்தியாவின் ஒடிசா மாநிலத்திற்கு இன்று வந்தார். புவனேஸ்வரில் உள்ள பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை, ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான், தலைமைச் செயலாளர் மனோஜ் அஹுஜா மற்றும் பிற மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்.

சிங்கப்பூர் அதிபரின் இந்த சுற்றுப்பயணத்தின்போது சிங்கப்பூருக்கும், ஒடிசா மாநிலத்திற்கும் இடையே பலவேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. 

Update: 2025-01-17 10:52 GMT

Linked news