கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மத்திய அரசுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 17-04-2025
கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மத்திய அரசுக்கு எதிராக பிரீடம் பூங்காவில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும்போது, பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது.
கடந்த 11 ஆண்டுகளில், சீராக விலையை உயர்த்தி வருகிறது. தற்போது பெட்ரோல் மற்றும் கியாஸ் விலை உயர்ந்துள்ளது. ஒவ்வொருவரையும் இது கடுமையாக பாதித்துள்ளது என கூறியுள்ளார். பிரதமர் மோடியின் நல்ல நாட்கள் வருகின்றன என்ற வாக்குறுதி பொய்யாகி விட்டது. அவர்கள் வாக்குறுதி அளித்தது இந்த நல்ல நாட்களா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Update: 2025-04-17 10:58 GMT