கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் கவர்னர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 17-04-2025
கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்
கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டு சென்றார்.மத்திய அரசின் அவசர அழைப்பின்பேரில் புதுடெல்லி செல்வதாக கூறப்படுகிறது. முன்னதாக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் கொடுக்காமல், நீண்ட காலம் நிலுவையில் வைத்திருந்தது பற்றி கடந்த வாரம் சுப்ரீம்கோர்ட்டு பரபரப்பான தீர்ப்பை அளித்து, கவர்னரின் நடவடிக்கையை கண்டித்தது. இது, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் டெல்லி செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி, அங்கு மத்திய மந்திரி அமித்ஷா உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர் மத்திய அரசுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-04-17 12:04 GMT