சொந்த வாகனத்தில் பணத்திற்காக பயணிகளை ஏற்றினால்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-10-2025

சொந்த வாகனத்தில் பணத்திற்காக பயணிகளை ஏற்றினால் அபராதம்

சொந்த பயன்பாட்டிற்கான கார் உள்ளிட்ட வாகனங்களில் பணத்திற்காக பயணிகளை ஏற்றினால் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக வாடகைக்கு விடுவதை தடுக்க போக்குவரத்துத்துறை இந்த அறிவுறுத்தலை தெரிவித்துள்ளது.

விதிகளை மீறி வெள்ளை நிற பதிவெண் பலகை கொண்ட வாகனங்களை வாடகைக்கு விடுவதாக புகார் எழுந்தநிலையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வாகனங்களை பறிமுதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2025-10-17 05:08 GMT

Linked news