குஜராத்தில் புதிய மந்திரிசபை பதவியேற்பு...... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-10-2025
குஜராத்தில் புதிய மந்திரிசபை பதவியேற்பு... ஜடேஜாவின் மனைவி அமைச்சரானார்
குஜராத் மாநில மந்திரி சபை இன்று விரிவாக்கம் செய்யப்படுவதாக நேற்று காலையில் மாநில அரசு தகவல் வெளியிட்டது. அதற்கு வசதியாக முதல்-மந்திரி பூபேந்திர படேலை தவிர அவரது மந்திரிசபையில் இடம்பெற்றிருந்த 16 மந்திரிகளும் மாலையில் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதைத்தொடர்ந்து புதிய மந்திரிசபை இன்று காலையில் பதவியேற்றது.
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா மந்திரியாக பதவியேற்றுள்ளார். குஜராத்தின் முன்னாள் உள்துறை இணை மந்திரி ஹர்ஷ் சங்வி துணை முதல்-மந்திரியாக பதவியேற்றார்.
Update: 2025-10-17 11:43 GMT