நாகையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை சென்னை,... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-11-2025

நாகையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

 சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதேபோன்று, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நாகை மாவட்டத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-11-17 04:08 GMT

Linked news