சவுதி அரேபியாவில் பஸ் விபத்து; 42 இந்தியர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-11-2025
சவுதி அரேபியாவில் பஸ் விபத்து; 42 இந்தியர்கள் பலி
சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் இருந்து மெதினா நோக்கி உம்ரா புனித பயணம் மேற்கொள்வோர் பஸ் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அந்த பஸ்சில் 43 பேர் பயணித்தனர். அப்போது அந்த் பஸ் இன்று அதிகாலை 1.30 மணியளவில் முப்ரிஹத் பகுதியருகே சென்றபோது, டீசல் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது.
இதில், பஸ்சில் இருந்த 20 பெண்கள், 11 குழந்தைகள் உள்பட 42 உம்ரா பயணிகள் பலத்த காயமடைந்து உயிரிழந்து உள்ளனர். அவர்களில் பலர் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து சென்றவர்கள் என முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றது. இந்த விபத்தில் ஒரே ஒருவர் உயிர் தப்பியுள்ளார்.
Update: 2025-11-17 05:09 GMT