அசாமில் நாளை முதல் எஸ்.ஐ.ஆர். பணிகள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-11-2025

அசாமில் நாளை முதல் எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்படுமென அறிவிப்பு

தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் தீவிர பட்டியல் சீர்திருத்தம் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அசாமில் நாளை முதல் எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்படுமென இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அசாம் மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநிலத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா வரவேற்றார். மேலும், தேர்தல் பணியை வெளிப்படையாகவும், சரியான நேரத்திலும் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு அரசாங்கம் முழு ஆதரவளிக்கும் என்று அவர் கூறினார். 

Update: 2025-11-17 12:54 GMT

Linked news