அனைத்து மாநிலங்களின் நியாயமான உரிமைகளை பெற்றுத்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 18-04-2025

அனைத்து மாநிலங்களின் நியாயமான உரிமைகளை பெற்றுத் தருவோம் - மு.க.ஸ்டாலின்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த ஆண்டார்குப்பத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

இதில், பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.418.15 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். ரூ.390.74 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர். மேலும், ரூ.357.43 கோடி மதிப்பில் 2 லட்சத்து 2 ஆயிரத்து 531 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஆகஸ்ட் 15-ம் தேதி விடுதலை நாளன்று மாநில முதல்-அமைச்சர்கள் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை எப்படி கலைஞர் பெற்றுத் தந்தாரோ.. அதே போல, மாநில சுயாட்சி தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவின் மூலமாக, அனைத்து மாநிலங்களின் நியாயமான உரிமைகளை பெற்றுத் தருவோம்.

மாநிலங்கள் சுயாட்சி பெற்றவையாக இருந்தால்தான், இங்குள்ள மக்களுக்கு தேவையானதை செய்ய முடியும்” என்று அவர் கூறினார்.

Update: 2025-04-18 09:14 GMT

Linked news