இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 18-04-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-04-18 09:21 IST


Live Updates
2025-04-18 13:37 GMT

பெங்களூரு - பஞ்சாப் ஆட்டம்: மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்

ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறும் 34-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் பெங்களூருவில் தற்சமயம் மழை பெய்வதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நின்றவுடன் டாஸ் போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2025-04-18 13:18 GMT

தமிழ்நாட்டில் இன்று 4 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் கோடை வெயில் தொடங்குவதற்கு முன்பே பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து காணப்படுகிறது. கடும் வெயில் காரணமாக வாகன ஓட்டிகள், சாலையோர வியாபாரிகள். கட்இடடத் தொழிலாளிகள், தோட்டத் தொழிலாளிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) 4 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.

இதன்படி மதுரை விமான நிலையம்: 102.92 டிகிரி பாரன்ஹீட்

மதுரை நகர்: 101.84 டிகிரி பாரன்ஹீட்

கரூர் பரமத்தி: 101.3 டிகிரி பாரன்ஹீட்

திருச்சி: 100.58 டிகிரி பாரன்ஹீட்

2025-04-18 12:26 GMT

மருதமலை கோவிலுக்கு காரில் வருபவர்களுக்கு அனுமதி இல்லை - கோவில் நிர்வாகம்

மருதமலை முருகன் கோவிலுக்கு காரில் வருபவர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதன்படி விசேஷ தினங்களில் மருதமலை முருகன் மலைக்கோவிலுக்கு 4 சக்கர வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும், பக்தர்கள் படிக்கட்டுகள் மற்றும் கோவில் பேருந்தை பயன்படுத்துமாறும் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

2025-04-18 12:06 GMT

குஜராத்தில் மின்சார வாகனங்களுக்கு 5 சதவீத வரி விலக்கு

குஜராத் மாநிலத்தில் 2026 மார்ச் 31ம் தேதி வரை மின்சார வாகனங்களுக்கு 5 சதவீத வரி விலக்கு அளிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இதன் மூலம் வரி விகிதம் 1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

2025-04-18 11:20 GMT

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே சாலை விபத்து - 3 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காரும், எதிரே வந்த லாரியும் மோதிய விபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

மணப்பாறை, தர்மபுரத்தைச் சேர்ந்த சேர்ந்த சின்னப்பன், அவரது நண்பர்களுடன் கேரளாவுக்கு புனித வெள்ளி பிரார்த்தனைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது வேடசந்தூர் - ஒட்டன்சத்திரம் சாலையில் இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-04-18 11:13 GMT

ஐ.பி.எல்.2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து குர்ஜப்னீத் சிங் விலகல்.. மாற்று வீரர் சேர்ப்பு

நடப்பு சீசனுக்கான சென்னை அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளரான குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக விலகியுள்ளார்.

இவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்க வீரரான டெவால்ட் பிரெவிஸ் மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

2025-04-18 11:09 GMT

9 மாவட்டங்களில் குழாய் எரிவாயு திட்டத்திற்கு அனுமதி

சென்னை உள்பட 9 மாவட்டங்களில் குழாய் எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இதன்படி ரூ.48 கோடி மதிப்பிலான குழாய் எரிவாயு திட்டத்தை டோரண்ட் கேஸ் நிறுவனம் செயல்படுத்த உள்ளது.

2025-04-18 11:08 GMT

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில், காரில் பயணித்தவர்களில் 3 பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் பயணித்த மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

2025-04-18 11:07 GMT

இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இந்தாண்டு இறுதியில் தங்களது ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 10 முதல் 20 சதவீதம் வரை கட்டணங்கள் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்