தமிழ்நாட்டில் இன்று 4 இடங்களில் வெயில் சதம் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 18-04-2025
தமிழ்நாட்டில் இன்று 4 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் கோடை வெயில் தொடங்குவதற்கு முன்பே பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து காணப்படுகிறது. கடும் வெயில் காரணமாக வாகன ஓட்டிகள், சாலையோர வியாபாரிகள். கட்இடடத் தொழிலாளிகள், தோட்டத் தொழிலாளிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) 4 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.
இதன்படி மதுரை விமான நிலையம்: 102.92 டிகிரி பாரன்ஹீட்
மதுரை நகர்: 101.84 டிகிரி பாரன்ஹீட்
கரூர் பரமத்தி: 101.3 டிகிரி பாரன்ஹீட்
திருச்சி: 100.58 டிகிரி பாரன்ஹீட்
Update: 2025-04-18 13:18 GMT