ஹமாஸ் அமைப்புக்கு நெதன்யாகு எச்சரிக்கைபோர் நிறுத்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-01-2025
ஹமாஸ் அமைப்புக்கு நெதன்யாகு எச்சரிக்கை
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தில் ஹமாஸ் அமைப்பினரால கடத்தப்பட்ட பணயக்கைதிகளின் பட்டியலைப் பெறும் வரை இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முன்னெடுக்காது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். இதுதொடர்பாக ஹமாஸ் அமைப்புக்கு இன்று மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த போர் நிறுத்தம் தற்காலிகமானதாக இருக்கலாம், இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தைகள் திட்டமிட்டபடி நடக்கவில்லை என்றால், காசாவில் மீண்டும் போரை தொடங்க அமெரிக்காவின் தற்போதைய மற்றும் புதிய நிர்வாகங்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும் நெதன்யாகு கூறுகிறார்.
Update: 2025-01-19 06:18 GMT