பனிமூட்டத்தால் வாகனங்கள் மோதல்- லாரி டிரைவர் பலி ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-01-2025
பனிமூட்டத்தால் வாகனங்கள் மோதல்- லாரி டிரைவர் பலி
உத்தர பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில், கடுமையான பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. கமரவுலி ரெயில்வே கிராசிங் கேட் மூடப்பட்டபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. முதலில் கிராசிங்கில் காத்திருந்த ஒரு கார் மீது லாரி மோதியது. பின்னால் வந்த 5 வாகனங்களும் அடுத்தடுத்து மோதின. இதில் லாரி டிரைவர் உயிரிழந்தார்.
Update: 2025-01-19 07:24 GMT