பெங்களூரு: மழை பாதித்த பகுதியில் மக்களை இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...19-05-2025
பெங்களூரு: மழை பாதித்த பகுதியில் மக்களை இன்று நேரில் சந்திக்கிறார் முதல்-மந்திரி சித்தராமையா
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் பல்வேறு பகுதிகளிலும் நேற்று கனமழை பெய்தது. வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து பெரும் சேதம் ஏற்படுத்தியது.
பஸ், ரெயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகளும் அதிக அவதிக்கு உள்ளானார்கள். மழைநீர் தேங்கியதில் சாக்கடை செல்லும் வழிகள் முழுவதும் நிரம்பி வழிந்தன. இதனால், அரையடி உயரத்திற்கு வீடுகளை சுற்றி வெள்ளநீர் சூழ்ந்தது. கார், பைக் உள்ளிட்ட வாகனங்களும் பகுதியளவு மூழ்கின.
இதுபோன்ற சூழலில், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா இன்று மாலை 4 மணியளவில் மழை பாதித்த பகுதிகளுக்கு நேரில் செல்கிறார். அவர் பெங்களூரு நகரை ஆய்வு செய்வதுடன், மழையால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கவனத்துடன் கேட்டறிகிறார். அவருடன் அதிகாரிகளும் செல்ல உள்ளனர்.