ஆசிய கிரிக்கெட் சங்க தலைவராக பாகிஸ்தானின் மொசின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...19-05-2025
ஆசிய கிரிக்கெட் சங்க தலைவராக பாகிஸ்தானின் மொசின் நக்வி பதவி வகிக்கும் நிலையில் ஆசிய கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் தொடர்களில் இருந்து விலக பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது என தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த தகவலை பி.சி.சி.ஐ. செயலாளர் தேவஜித் சைகியா மறுத்துள்ளார்.
ஆசிய கோப்பை தொடர் குறித்து பி.சி.சி.ஐ. இதுவரை பேச்சுவார்த்தையோ, முடிவோ மேற்கொள்ளவில்லை. ஐ.பி.எல். மற்றும் இங்கிலாந்து தொடர்கள் மீதுதான் தற்போது எங்களது முழு கவனம் உள்ளது என்று கூறினார்.
Update: 2025-05-19 13:27 GMT